International
பிரான்ஸ்

தாய்-மகள் மீது துஷ்பிரயோகம்! – பாலியல் பலாத்கார வழக்கில் கத்தோலிக்க பாதிரியார் கைது!!

பாலியல் பலாத்கார வழக்கில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த டிசம்பர் 2016 ஆம் ஆண்டு Versailles நகரின் கத்தோலிக தேவாலயத்தின் பாதிரியாரான Father Laurent Thuillier மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர். 18 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவர் மீதும், 15 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருத்தி மீதும் பாதிரியார் Laurent Thuillier பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டிருந்தமை உறுதியானது. அதை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். 

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இரு பெண்களும் ‘தாயும் மகளும்’ என அறியமுடிகிறது. தவிர, அவர் குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தலும் விடுத்திருந்ததாக அறியமுடிகிறது. Versailles நகர கத்தோலிக்க தேவாலய முதன்மை அருட்தந்தை Eric Aumonier தெரிவிக்கும் போது, <<தவறுகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படவேண்டும்!>> என குறிப்பிட்டார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!