International
பிரான்ஸ்

திருடன் விட்டுச் சென்ற சிகரெட் துண்டு! – DNA மூலம் சிக்கிய பரிதாபம்!!

திருடன் ஒருவன், தான் திருடச்சென்ற வீட்டில் சிகரெட் துண்டு ஒன்றை விட்டுவிட்டுச் சென்றுள்ளான். அதுவே அவனைக் கைது செய்ய காரணமாக அமைந்ததுள்ளது.

லியோன் நகருக்கு அருகே உள்ள  Rillieux-la-Pape நகரில் இச்சுவாரஷ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நகரில் உள்ள வீட்டில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. கைகளில் கிடைத்த நகைகள் பணம் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு தப்பியோடிய முப்பது வயதுடைய கொள்ளயன், திருடப்போன வீட்டில் வைத்து சிகரெட் புகைத்துள்ளான். அதன் மீதி துண்டை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான். அதை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

DNA பரிசோதனையில், குறித்த சிகரெட் துண்டில் கிடந்த தகவல்களும், ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடைய நபர் ஒருவனின் கைரேகையும் ஒத்துப்போவதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவன் கைது செய்யப்பட்டுள்ளான். நேற்று திங்கட்கிழமை Villefranche-sur-Saone குற்றவியல் நீதிமன்றத்தில் அவன் முன்னிலைப்படுத்தப்பட்டான்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!