International
பிரான்ஸ்

திருட்டு மகிழுந்தில் தப்பியோடிய நபர்! – 30 கி.மீ துரத்தல்!!

திருட்டு மகிழுந்தில் பயணித்த நபர் ஒருவனை 30 கிலோமீற்றர்கள் துரத்திச் சென்று ஜோந்தாமினர்கள் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் Brittany இல் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை Guipavas (Finistère ) நகரில், இரவு விருந்து விழா ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, இளைஞ  ஒருவன் வெளியேறியுள்ளான்.  பின்னர் வெளியிக் நின்றிருந்த மகிழுந்து ஒன்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளான் . கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோந்தாமினர்கள் குறித்த சாரதியை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவன் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளான். அதைத் தொடத்ந்து ஜோந்தாமினர்கள் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்றுள்ளனர்.

45 நிமிடங்களாக இந்த துரத்தல் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாகச் சென்றும், சிவப்பு சமிக்ஞைக்கு நிறுத்தாமலும், தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சென்றும் மகிழுந்து தப்பி ஓடியது. ஜோந்தாமினர்களும் விடாமல் துரத்திச் சென்றனர். மொத்தமாக 30 கி.மீ தூரம் இந்த துரத்தல் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையில் ஜோந்தாமினரின் மகிழுந்தையும் இடித்துத் தள்ளியுள்ளான்.  துரத்தலின் முடிவில், தப்பி ஓடிய மகிழுந்து நேர கடலில் சென்று பாய்ந்துள்ளது.

பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் சாரதி கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவன் தப்பியோடிய மகிழுந்து அவனுடையத்ய் இல்லை எனவும், திருடிக்கொண்டு சென்றுள்ளான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர மதுபோதை சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!