International
பிரான்ஸ்

திருமணம் செய்துகொண்ட மஞ்சள் மேலங்கி ஜோடிகள்! – மீண்டும் சம்பவம்!!

ஏற்கனவே மஞ்சள் மேலங்கி ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, மீண்டும் அதேபோன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு Christel மற்றும் Ennrick எனும் இரு நபர்கள் போராட்டாட்டம் ஒன்றில் சந்தித்துக்கொண்டு நட்பானதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். Bizeneuille (Allier) நகரில் உள்ள சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது இரு மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். இந்த நட்பு பின்னர் காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

Bizeneuille நகரமண்டபத்தில் இவர்களது திருமணம் இடம்பெற்றது. <<நாங்கள் போராட்டத்தின் போது மூன்று தடவைகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டோம்!>> என அவர்கள் குறிப்பிட்டனர். மஞ்சள் மேலங்கி போராளிகள் திருமணம் செய்துகொள்வது இது இரண்டாவது தடவையாகும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!