International
பிரான்ஸ்

தீயணைப்பு வாகனத்தை திருடி, சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்ட நபர்கள்! – கைது!!

தீயணைப்பு வாகனம் ஒன்றை திருடி, அதை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய இரு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசித்திர சம்பவம் Jura மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாவட்டத்தின் Fontenu பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு, அதில் ஏறி நின்று காணொளியை படமாக்கி, Snapchat சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.  ஜூலை 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதும் பல எதிர்மறையான கருத்துக்கள் பதிவாகியுள்ளன. ‘உயிர் காக்கும் இயந்திரத்தை இதுபோல் தவறாக பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது!’ என அப்பகுதி நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
காணொளியில் தோன்றிய இருவரும், ‘எங்களிடம் இருப்பது ஒரு வாழ்க்கை. நாங்கள் ஆண்கள்!’ என கருத்து பகிர்ந்துள்ளமையும் பலரால் கண்டிக்கப்பட்டிருந்தது. Jura மாவட்டத்தில் முதன்முறையாக இதுபோல் நடப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Mont-sur-Monnet பகுதியில் வைத்து வாகனம் மீட்கப்பட்டதோடு, குறித்த இருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!