International
பிரான்ஸ்

தேசிய நாள் நிகழ்வு! – அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பறக்கும் மனிதன்!!

தேசிய நாள் நிகழ்வுகள் தற்போது சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், place de la Concorde இல் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, தற்போது சோம்ப்ஸ்-எலிசேக்கு வருகை தந்துள்ளார். 

அணிவகுப்பு, குதிரை வீரர்கள் அணிவகுப்பு என்பதோடு பிரெஞ்சு விமானபடை வீரர்களும் விமான சாகச நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர். வானத்தில் விமானத்தினை கொண்டு பிரெஞ்சு கொடியில் உள்ள மூவர்ணங்களை வானில் தோற்றுவித்தனர். தவிர, கடந்த வருடங்களில் எப்போதும் இடம்பெறாத மிக வித்தியாசமான சாகசம் ஒன்றும் இன்றைய நாளில் இடம்பெற்றது. 

jet-ski எனும் புகழ்பெற்ற விளையாட்டினை பிரெஞ்சு இராணுவம் தங்கள் படை பலத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது என பரிசோதித்து வரும் நிலையில்,  உலக சாம்பியனான Franky Zapata, (பிரான்சை சேர்ந்தவர்) இன்று சோம்ப்ஸ்-எலிசேயில் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கு அந்த சாகசத்தை நிகழ்த்தினார். Flyboard என அழைக்கப்படும் கருவியில் ஏறி நின்றுகொண்டு அப்படியே வானத்தில் எழுந்து பறக்க ஆரம்பித்தார். இதே இயந்திரத்தை இதுவரை தண்ணீரின் உதவியுடன் கடலில் சாகசம் செய்து பார்த்திருந்த நிலையில், இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

பத்து நிமிடங்கள் வரை இந்த சாகச நிகழ்வு இடம்பெற்றது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!