International
பிரான்ஸ்

தேவாலயங்களில் திருடிய கொள்ளையர்கள்! – பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்!!

இல்-து-பிரான்சுக்குள் பல்வேறு தேவாலயங்களில் கொள்ளைகளில் ஈடுபட்ட இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரலில் இருந்து ஓகஸ்ட் வரையான மாதங்களுக்கிடையில் €70,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்களை இவர்கள் திருடியுள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதும் கொள்ளையர்களை கைது செய்ய முடியாமல் இருந்துள்ளது. குறித்த இரு கொள்ளையர்களும் தேவாலயங்களுக்குள் நுழைந்து அதன் கதவுகளை மூடிவிட்டு உள்ளே தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது போன்று குறித்த காலப்பகுதிக்குள் 6 தேவாலயங்களில் அவர்கள் திருடியுள்ளனர். விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்த காவல்துறையினர், கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, Stains நகரில் வைத்து கொள்ளையர்கள் தேவாலயத்தில் திருடிய மின்சார வயர்களை விற்பனை செய்வதற்கு முயற்சிக்கும் போது அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். ருமேனியா நாட்டைச் சேர்ந்த இருவரும் 29 மற்றும் 41 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ், Seine-Saint-Denis மற்றும் Seine-et-Marne மாவட்டங்களில் உள்ள ஆறு தேவாலயங்களில் €70,000 மதிப்புள்ள பொருட்களை இதுவரை இவர்கள் திருடியுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!