International
பிரான்ஸ்

தொடரும் கைது நடவடிக்கைகள்! – பரிசில் சிறிதளவு பதட்டம்!!

நண்பகலுக்கு பின்னதாக பரிசில் சில இடங்களில் சிறிதளவு பதட்டம் நீடித்தது. நீஸ் நகரிலும் கைது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீஸ் நகரில் தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசில், 14 ஆம் வட்டாரத்தில் Denfert-Rochereau இல் இருந்து Montmartre வரை மஞ்சள் மேலங்கி போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் ஜோந்தாமினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, பரிசுக்குள் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முன் எப்போதும் இல்லாத அளவு பரிசுக்குள் 4,688 இடங்களில் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!