International
பிரான்ஸ்

தொடரூந்து நிலைய உணவகத்தில் சாண்ட்விச்சுடன் வந்த எலிக்குஞ்சு!!

தொடரூந்து நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் பெற்றுக்கொண்ட உணவில் உயிருடன் இருந்த எலி ஒன்று வந்திருந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை gare d’Austerlitz நிலையத்தில் உள்ள La Croissanterie உணவகத்துக்கு பயணி ஒருவர் சென்றுள்ளார். தனக்கான உணவான சாண்ட்விச் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால் எதிர்பாரா விதமாக உணவு எடுத்துவந்த தட்டில் எலி ஒன்று உயிருடன் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிரசியடைந்த பயணி, உடனடியாக தனது தொலைபேசியை எடுத்து அதனைப் புகைப்படம் எடுத்துள்ளார்.

உணவகத்தில் பணியாற்றிருக்கொண்டிருந்த நபரிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டது. அவர் இது தொடர்பான போதிய விளக்கம் அளிக்கவில்லை. உடனடியாக உணவகம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உணவகத்தில் இருந்த அனைத்து உணவுகளும் கொட்டப்பட்டதாகவும், வெளியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட உணவில் இருந்து இந்த எலி வந்திருக்க கூடும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை, பரிஸ் துரித உணவுகளுக்கான சங்கம் ஆரம்பித்துள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!