International
பிரான்ஸ்

நகரசபை தேர்தல்! – ஆன் இதால்கோவுக்கு அதிக செல்வாக்கு!!

வரும் நகரசபைத் தேர்தலில் மீண்டும் முதல்வராக ஆன் இதால்கோவுக்கு அதிக வாய்ப்புகள் இருபதாக கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

Journal du Dimanche பத்திரிகைக்காக Ifop நிறுவனம் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ சிக்கிக்கொண்டிருந்ததோடு, செல்வாக்கு சரிவையும் கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பில் 23% இல் இருந்து 25 % வீத செல்வாக்குடன் முதல் இடத்தில் உள்ளார். இம்மானுவல் மக்ரோனின் <<ரீபபுளிக் ஓ மார்செ>> கட்சியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி ஆன் இதால்கோ முன்னணியில் உள்ளார்.

அதேவேளை, ரீபபுளிகன் கட்சி வேட்பாளர் Rachida Dati, 16% புள்ளிகளுடன் உள்ள்மையும் குறிப்பிடத்தக்கது. ஆன் இதால்கோ, சுற்றுச்சூழல் மாசடைவு, புவி வெப்பமடைதல், போக்குவரத்து, 2024 ஒலிம்பிக்கை கைப்பற்றுதல் என பல்வேறு  முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!