International
பிரான்ஸ்

நவம்பர் 13 தாக்குதல்! – நெதர்லாந்தில் இருவர் கைது!!

நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரு நபர்கள் நெதர்லாந்தின்

Amsterdam நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பரிஸ் மற்றும் அதன் புறநகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 135 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இது தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நெதர்லாந்தின் Amsterdam நகரில் வைத்து இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கியவர்களில் இருவரும் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

நெதர்லாந்து காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் விரைவில் பிரான்சுக்கு அழைத்துவரப்பட உள்ளதாகவும் அறியமுடிகிறது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!