International
பிரான்ஸ்

நாடு முழுவதும் 32,000 போராளிகள்! – உள்துறை அமைச்சகம் தகவல்!!

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற 18 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், நாடு முழுவதும் 32,300 பேர் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களை விட நேற்றைய ஆர்ப்பாட்டம் மிக வன்முறை சம்பவங்கள் பதிவான போராட்டமாக அமைந்துள்ளது. குறிப்பாக பரிசுக்குள் பல இடங்களில் காவல்துறையினருக்கும் போராளிகளுக்கும் இடையே மோதல் வெடித்ததோடு, பல இடங்களில் தீயினை பெருவாரியாக மூட்டி, பலத்த சேதத்தினையும் விளைவித்திருந்தார்கள். கடைகள் உடைக்கப்பட்டு, திருடப்பட்டும் உள்ளனர். மகிழுந்துகள் பலவும் சேதமடைந்துள்ளன.

கடந்தவாரம் இடம்பெற்ற 17 ஆவது வார ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் 28,600 பேர் கலந்துகொண்டிருந்தனர். இதில் பரிசுக்குள் 3,000 பேர் கலந்துகொண்டனர். கடந்தவாரத்தை விடவும், இந்த வாரத்தில் போராளிகளும், வன்முறைகளும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!