International
பிரான்ஸ்

நான்கு நாட்களுக்கு தடைப்படும் RER B இன் ஒரு பகுதி!!

திருத்த வேலைகள் காரணமாக RER B சேவைகளின் ஒரு பகுதி, அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தடைப்பட உள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதங்களின் வார இறுதி நாட்களில் RER B வடக்கு சேவைகள் திருத்தப்பணிகள் காரணமாக தடைப்பட்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில் தற்போது தெற்கு பிராந்திய சேவைகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளன. முதல் கட்டமாக Bourg-la-Reine இல் இருந்து Massy-Palaiseau நிலையம் வரையான RER B சேவைகள் தடைப்பட உள்ளன. இன்று புதன்கிழமை மே 1 ஆம் திகதியில் இருந்து வரும் சனிக்கிழமை மே 4 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் குறித்த நிலையங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, Antony இல் இருந்து ஓர்லி விமான நிலையத்துகிடையேயான ( l’aéroport d’Orly ) Orlyval சேவைகளும் குறித்த நாட்களில் தடைப்பட உள்ளன.  இந்த போக்குவரத்து தடைக்காக சிறப்பு பேரூந்துக்கள் சேவைக்கு விடப்பட்டுள்ளன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!