International
பிரான்ஸ்

நான்கு மணிநேர இடைவெளியில் இருதடவைகள் மதுபோதையில் சிக்கிய சாரதி!!

நாற்பதின் வயதுகளையுடைய நபர் ஒருவர் நான்கு மணிநேர இடைவெளியில் இரு தடவைகள் மதுபோதையில் வாகனம் செலுத்தி, காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை  Quimper (Finistère) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்று 14:00 மணி அளவில், 44 வயதுடைய நபர் ஒருவர், ஸ்கூட்டர் வகை உந்துருளி ஒன்றில் பயணித்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இரத்தத்தில் லிற்றருக்கு 1 கிராம் எனும் அளவில் மது கலந்திருந்ததால், அவரை அப்பகுதி காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் விடுவிக்கபட்டார்.

இச்சம்பவம் இடம்பெற்று நான்கு மணிநேரத்தில் மீண்டும் அவர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். 18:00 மணி அளவில் அதே Quimper நகரில், குறித்த நபர் இரத்தத்தில் லிற்றருக்கு 2.2 கிராம் மது கலந்திருந்த நிலையில் மகிழுந்து செலுத்திக்கொண்டிருந்துள்ளார். இம்முறை அவர் வீதியில் நடுவில் மகிழுந்தை நிறுத்தி, அதன் இயக்கத்தையும் நிறுத்திவிட்டு, மகிழுந்துக்குள் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மறுநாள் வியாழக்கிழமை அவருக்கு நான்கு மாத ஓட்டுனர் உரிம இரத்தும், தண்டப்பணமும் அறவிடப்பட்டது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!