International
பிரான்ஸ்

நியூஸிலாந்து பயங்கரவாத தாக்குதல்! – அணைகிறது ஈஃபிள் கோபுரம்!!

நியூஸிலாந்தின் Christchurch நகரில் இடம்பெற்ற தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை இரவு ஈஃபிள் கோபுரம் தன் விளக்குகளை அணைக்கின்றது.

நியூஸிலாந்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதனை அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவில் இருந்து ஈஃபிள் கோபுரம் தன் விளக்குகளை அணைத்துக்கொண்டு இருளில் மூழ்கும் என ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!