International
பிரான்ஸ்

நிர்வாணமாக காவல்துறையினரை தாக்கிய நபர்! – Val-d’Oise இல் சம்பவம்!!

நேற்று செவ்வாய்க்கிழமை நபர் ஒருவர் முழு நிர்வாணமாக நான்கு காவல்துறையினரை தாக்கியுள்ளார். இத்தகவல் இன்று புதன்கிழமை வெளியாகியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில், Cergy (Val-d’Oise) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய நபர் ஒருவர் Cergy-Prefecture RER நிலையத்துக்கு முன்பாக, முழு நிர்வாணமாக நின்றுகொண்டு, வீதியில் சென்றுகொண்டிருந்த நபர்களை தாக்கிக்கொண்டிருந்துள்ளார். உடனடியாக சம்பவம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

ஆனால் குறித்த நபர் ஆக்ரோஷமாக காவல்துறையினரையும் தாக்கியுள்ளார். அதிகபட்சமாக காவல்துறை அதிகாரி ஒருவரை இரத்தம் வரும் அளவுக்கு கடித்துள்ளார். ஒருவழியாக குறித்த நபர் கைது செய்யப்பட்டார். Cergy நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!