International
பிரான்ஸ்

நோர்து-டேம் – €883 மில்லியன் நன்கொடை! – ஆனால் சேகரிக்கப்பட்ட பணம் வெறும் €38 மில்லியன் மாத்திரமே!!

நோர்து-டேம் தேவாலயத்தில் இடம்பெற்ற தீ சம்பவத்தை தொடர்ந்து, திருத்தப்பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட நன்கொடை தொகை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த ஒரு மாத காலத்தில், இதுவரை €883 மில்லியன் யூரோக்கள் நன்கொடையாக வழங்குவதாக பல்வேறு நிறுவனங்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதில் €600 மில்லியன் யூரோக்கள் பெரு நிறுவனங்களிடம் இருந்தும், மீதமானவை தனிநபர்களிடம் இருந்தும் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய திகதியில் வெறுமனே €38 மில்லியன் யூரோக்கள் மாத்திரமே பணமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Fondation de France, 

Heritage Foundation, 

Center des musées nationaux,

Notre-Dame Foundation

ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த நன்கொடை சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நோர்து-டேம் தேவாலயத்துக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு வரி கழிவுகளுக்கான ஏற்பாடுகளும் அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ளது. தவிர, நோர்து-டேம் தேவாலயத்தினை ஐந்துவருட காலத்துக்குள் புணரமைப்பு செய்யப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்  உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!