International
பிரான்ஸ்

பண வண்டியை திருடிய வழக்கில் புதிய நபர் ஒருவர் சரண்! – 1.7 மில்லியன் யூரோக்கள் தொடர்ந்தும் தேடுதலுக்குள்!!

கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி Aubervilliers இல் தனியார் நிறுனம் ஒன்றுக்குச் சொந்தமான பண வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், பல்வேறு புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.

இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கடந்த செவ்வாய்க்கிழமை Amiens நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தான். அதன் போது பணத்தாள்கள் அடங்கிய சில மூட்டைகளும் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் தொடர்பில் மற்றுமொருவன் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளான். அவனை மேலதிக விசாரணைகளுக்காக தங்களது கட்டுப்பாட்டுக்குள் காவல்துறையினர் கொண்டுவந்துள்ளனர். பணத்தினை கொள்ளையிடுவதற்கு குறித்த நபர் உதவி செய்துள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேவேளை, கொள்ளையிடப்பட்ட மொத்த தொகையில் 3.1 மில்லியன் யூரோக்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமான 1.7 மில்லியன் யூரோக்கள் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றது. BRB அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!