International
பிரான்ஸ்

பதினெட்டாம் வட்டாரத்தில் அகதி முகாம் அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

இன்று புதன்கிழமை பரிஸ் பதினெட்டாம் வட்டாரத்தில் அகதி முகாம் ஒன்று திறக்கப்பட உள்ளது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்களால் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

18 ஆம் வட்டாரத்தின் Rue des Poissonniers வீதியில் அகதிகளுக்கான புதிய தங்குமிடம் ஒன்று திறக்க பரிஸ் மாநகர மண்டபம் முடிவெடுத்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வீதியில் இறங்கி போராடினார்கள். அப்பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றையே தங்குமிடமாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் ஆலோசிக்காமல் முடிவு எடுத்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறைந்தது இந்த முடிவை அரசு பிற்போடவேண்டும் எனவும் கோரியுள்ளனர். பதினெட்டாம் வட்டாரத்தில் முன்னதாகவே இரு அகதி முகாம் உள்ளமை வாசகர்கள் அறிந்ததே. பரிசை விட்டு இல்-து-பிரான்சுக்குள் வேறு எங்கேனும் இந்த அகதி முகாமை அமைக்கவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!