International
பிரான்ஸ்

பத்தாம் வட்டாரத்தில் குழுமோதல்! – கத்திகுத்து தாக்குதலில் நபர் பலி!!

நேற்று வெள்ளிக்கிழமை பரிஸ் பத்தாம் வட்டாரத்தில் இடம்பெற்ற குழு மோதலில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பத்தம் வட்டாரத்தில் உள்ள Tesson மற்றும் Saint-Maur வீதிகள் இணையும் சந்தியில் குழு மோதல் ஒன்று வெடித்துள்ளது. அதிகாலை 3 மணி அளவில் இந்த மோதல்கள் வெடித்துள்ளன. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், கத்திக்குத்துக்கு இலக்கான நபரை காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொண்டும் நபரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. 3.15 மணி அளவில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 23 வயதுடைய இளைஞன் எனவும், மோதலில் ஈடுபட்டது 15 வரையான இளைஞர்கள் எனவும் அறியமுடிகிறது. தவிர, வியாழக்கிழமை மாலை குறித்த இரு குழுக்களுக்குமிடையே வாக்குவாதம் நிலவியுள்ளதாகவும் அதைத் தொடர்ந்தே வெள்ளிக்கிழமை அதிகாலை மோதல் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!