International
பிரான்ஸ்

பன்னிரெண்டு வயது மஞ்சள் மேலங்கி போராளி கைது!!

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் கைது செய்யபட்டவர்களில் பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவனும் உள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை Montpellier நகரில் 13 ஆம் வார மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய காரணத்திற்காக பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதிர்ச்சியளிக்கும் விதமாக அவர்களில் 12 வயது சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் உடைந்த டைல்ஸ் துண்டுகளை காவல்துறையினர் நோக்கி வீசி எறிந்துள்ளான்.

கைது செய்யப்பட்ட சிறுவன் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். சில மணிநேரங்களின் பின்னர் அவனது பெற்றோர்களால் நிலையத்தில் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் விரைவில் உள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக முன்னிலைப்படுத்தக்கோரி அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் குறைந்த வயது சிறுவன் கைது செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!