International
பிரான்ஸ்

பரிசில் அளவு கடந்த வன்முறை! – 64 பேர் கைது!!

பதினெட்டாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்று வரும் நிலையில், பல வன்முறைச் சம்பவங்கள் பரிசில் இடம்பெற்றுள்ளன.

இதுவரை பரிசில் 64 பேர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Place de l’Etoile பகுதியில் பெரும் கலவரம் வெடித்து, போராளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டன. சோம்ப்ஸ்-எலிசேயிலும் கடைகள் சூறையாடப்பட்டன. கடைகள் எரியூட்டப்பட்டும் உள்ளன. இந்த தீ விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதில் இரு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

பரிசில் 5,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் தாங்கிய வாகனங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்தவாரங்களை விட இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான போராளிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!