International
பிரான்ஸ்

பரிசில் இருந்து – பிரேஸில் நட்சத்திரம் நெய்மர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு!!

பரிசில் வைத்து பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக பிரேஸில் நாட்டு நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரரும், தற்போது PGS அணிக்காக விளையாடும் வீரருமான நெய்மர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பிரேஸிலின் Paulo நகரில் வசிக்கும் பெண் ஒருவர், தன்னை உதைப்பந்தாட்ட வீரர் நெய்மர் பரிசில் வைத்து பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டியுள்ளார். ஆனால் நெய்மரின் தந்தை இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். <<இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இது பணம் பறிக்கும் முயற்சி>> என குறிப்பிட்டுள்ளார். 

குறித்த பெண் கடந்த மே 15 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை பரிசில் இருந்ததாகவும், அதன் போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேஸிலின் பல்வேறு ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நெய்மர் தன்னை அழைத்ததாகவும், இருவருக்கும் சமூக வலைத்தளமூடாக நட்பு ஏற்பட்டதாகவும், பரிசில் வைத்து குடிபோதையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறித்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!