International
பிரான்ஸ்

பரிசில் ஒரு கடற்கரை! – ஆன் இதால்கோவின் முயற்சியில் இன்று முதல் திறப்பு!!

இன்று சனிக்கிழமை முதல், பரிசில் கோடைகால பரிஸ் கடற்கரையை பரிசில் வாழும் மக்கள் அனுபவிக்கலாம். பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இந்த ஏற்பாட்டினை ஒழுங்கமைத்துள்ளார்.



பரிசில் சென் நதியின் இரு ஓரங்களிலும் கடற்கரை போன்று கோடை வெயிலை இதமாக்கும் நிழற்குடைகள் அணிவகுத்து நிற்கின்றன. இது பரிஸ் மக்களுக்கு ஒரு ‘குட்டி’ கடற்கரையின் எண்ணத்தை தோற்றுவிக்கும் என ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து இந்த கோடைகால கடற்கரைகள் அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஒவ்வொரு தடவையும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளால் எதிர்ப்பு கிளம்பிய வண்ணமே இருந்து வருகிறது. இம்முறை பரிசில் சுற்றுச்சூழல் மாசடைகிறது என ஆர்வலர்கள் கொடி பிடிக்க, அந்த எதிர்ப்பையும் மீறி ஆன் இதால்கோ இவ்வருடமும் இதனை சாத்தியப்படுத்தியுள்ளார்.


“இந்த கோடைகால கடற்கரையினால் சுற்றுச்சூழல் மாசடைவது உண்மைதான். அதை பாதுகாக்கவேண்டியது தார்மீக கடமை. ஆனால், இந்த கடற்கரை இக்கோடை காலத்தில் அவசியமான ஒன்று. தவிர, இவ்வருட ஆரம்பத்தில் இருந்து பல வீதி கட்டுப்பாடுகளால் போக்குவரத்து நெரிசலையும், சுற்றுச்சூழல் மாசடைவையும் கணிசமாக குறைத்துள்ளோம்!’ என ஆன் இதால்கோ குறிப்பிட்டார்.



இந்த கோடைகால கடற்கரை செப்டம்பர் 2 ஆம் திகதி வரை இருக்கும் எனவும், அதே காலப்பகுதி வரை bassin de la Villette இல் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகமும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!