International
பிரான்ஸ்

பரிசில் தீ! – கட்டிடம் நொருங்கும் ஆபாயத்தில்..!!

இன்று புதன்கிழமை காலை பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இரண்டாவது நாளாக பதினைந்து தீயணைப்பு படையினர் வரை மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தில் rue Erlanger வீதி முழுவதுமே பெரும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், தீ பரவியிருந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயத்துக்குள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றி மேலும் யாரேனும் சிக்குண்டுள்ளார்களா என சோதனையிட்டு வருவதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கட்டிடத்தில் உள்ள மூன்று தளங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது எனவும், கட்டிடத்தில் மீள் அறிவிப்பு வரும் வரை குடியமர்த்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதோடு, 30 பேர் காயமடைந்தும் உள்ளனர். சமீபத்தில் இதுபோன்றதொரு கோர விபத்து இடம்பெறவில்லை எனவும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்மணி தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!