International
பிரான்ஸ்

பரிசில் தீ! – சிறையில் அடைக்கப்பட்ட சந்தேக நபர்!!

பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண், விசாரணைகளின் பின்னர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

rue Erlanger வீதியில் இடம்பெற்றிருந்த இந்த விபத்தில் பத்து பேர் பலியாகியிருந்தோடு, 96 பேர் காயமடைந்திருந்தனர். கடந்த 14 வருடங்களில் இடம்பெற்றிராத மிகப்பெரிய தீ விபத்து இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து சந்தேகத்தின் பேரில் 40 வயதுகளையுடைய பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட அவர் இந்த தீ சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து, நேற்று வெள்ளிக்கிழமை நீதிபதிகளிடம் முன்னிலைப்படுத்தி, சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளில் குறித்த பெண்ணிடம் இருந்து போதிய தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!