International
பிரான்ஸ்

பரிசில் பெரும் வன்முறை வெறியாட்டம்! – உள்துறை அமைச்சர் கண்டனம்!!

இன்று மஞ்சள் மேலங்கி போராளிகள் பரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சற்று முன்னர் பரிசில் பெரும் வன்முறை வெறியாட்டம் இடம்பெற்றுள்ளது

வன்முறையில் எட்டாம் வட்டாரத்தின் rue François Ier வீதியில் உள்ள கடை ஒன்று அடித்து நொருக்கப்பட்டுள்ளது. Boulevard Saint-Germain பகுதியில் பேரூந்து ஒன்றின் கண்ணாடிகள் நொருக்கப்பட்டுள்ளது

Champs-de-Mars பகுதியில் மஞ்சள் மேலங்கி போராளிகள் மகிழுந்து ஒன்றை தீயிட்டு கொழுத்தியதைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும் கலவரக்காரர்களுக்குமிடையே பெரும் மோதல் வெடித்தது. காவல்துறையினர் மீது சரமாரியான தாக்குதல்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்டனர்.

இந்த வன்முறையை உள்துறை அமைச்சர் Christophe Castaner கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார். <<இந்த வன்முறைகள் ஒரு வெறுப்பை உங்கள் மீது ஏற்படுத்துகின்றது>> என அவர் குறிப்பிட்டார்.

17:00 மணிக்கு கிடைத்த தகவல்களின் படி பரிசில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!