International
பிரான்ஸ்

பரிசை முடக்கிய 9,000 போராளிகள்! – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன!!

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கடந்த சில வாரங்களை விடவும் அதிகளவான போராளிகள் கலந்துகொண்டு பரிசை முற்றுகையிட்டனர். 

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நேற்றைய 23 ஆவது மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் நாடு முழுவதும் 27,900 போராளிகள் கலந்துகொண்டிருந்தனர். இது கடந்த சில வாரங்களை விடவும் சற்று அதிகம் எனவும், அதேவேளை, பரிசுக்குள் 9,000 பேர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் இடம்பெற்ற 22 ஆவது வார போராட்டத்தில், பரிசில் 5,000 பேர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், இந்தவாரம் 9,000 பேர் கலந்துகொண்டிருந்தமை போராட்டத்தை மீண்டும் வலுவான திசைக்கு கொண்டு செல்வதாக போராளிகள் தெரிவித்துள்ளனர். 

மஞ்சள் மேலங்கி போராட்ட குழுவினர் தரப்பில், தாம் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் 101,125 பேர் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். நேற்றைய ஆர்ப்பாட்டம் காரணமாக பல்வேறு பகுதிகள் பாதுகாப்பு கருதி முடக்கப்பட்டதாகவும், சில தொடரூந்து சேவைகள், ட்ராம் சேவைகள் மற்றும் பேருந்து சேவைகளும் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!