International
பிரான்ஸ்

பரிஸ் – உள் சுற்றுவட்டவீதியில் விபத்து! – ஏழுபேர் காயம்!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் உள்ள உள்சுற்றுவட்ட வீதில் ஏற்பட்ட விபத்தில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் மிக மோசமாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில், பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte des Lilas வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இரு வாகனக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுப்பட்டதால் அதில் பயணித்த ஏழுபேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் மிக மோசமாக நிலையில், அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விபத்தைத் தொடர்ந்து, போக்குவரத்து கணிசமாக பாதிப்புக்குள்ளாக, தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களை வீதியில் இருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். 19 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!