International
பிரான்ஸ்

பரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு! – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி!!

இன்று ஞாயிற்றுக்கிழமை பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில், காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

27 வயதுடைய அதிகாரி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் rue Albert வீதியில் உள்ள குறித்த அதிகாரியின் வீட்டில் இன்று காலை அதிகாரி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் கால்களுக்கு கீழே அவரது சேவைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. <<இது ஒரு தற்கொலையாக இருக்கலாம்>> என முதல்கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அதிகாரியை காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததன் பின்னரே இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 25 அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!