International
பிரான்ஸ்

பரிஸ் – காவல்துறை அதிகாரியை கொலை செய்ய முயன்ற 19 வயது இளைஞன்!!

காவல்துறை அதிகாரி ஒருவரை 19 வயது இளைஞன் ஒருவன் கொலைசெய்ய முற்பட்டுள்ளான். பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பரிசின் லா சப்பல் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பத்துப்பேர் கொண்ட குழு ஒன்று மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் இந்த மோதலில் தலையிட்டனர். மோதலை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் நிலமை வேறு விதமாக மாறியுள்ளது. 

மோதலில் ஈடுபட்டிருந்தவர்கள் குறித்த இரு காவல்துறை அதிகாரிகளையும் தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் 19 வயதுடைய இளைஞன் ஒருவன் கண்ணாடி போத்தல் ஒன்றினால் அதிகாரியை மோசமாக தாக்கியுள்ளான். ஆஃப்கான் குடியுரிமை கொண்ட குறித்த இளைஞன் பின்னர் கைது செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளான். அவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!