International
பிரான்ஸ்

பரிஸ் – கைகளில் கூரான வாள் பிணைத்து வந்த நபர்! – காவல்துறையினரால் கைது!!

பரிசில் சந்தேகத்திற்குரிய நடத்தை காரணமாக 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான். 

நேற்று முன்தினம் சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராட்டம் பரிசில் இடம்பெற்றிருந்தது. இதன் போது 27 வயதுடைய ஒருவன் மீது காவல்துறையினர் சந்தேகம் கொண்டு, சோதனை நடத்தினர். அதன் போது அவன் இரண்டு நீண்ட வாளினை முன் கைகள் இரண்டோடும் சேர்த்து பிணைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடத்தைக்குரிய காரணம் அறிய முடியவில்லை. உடனடியாக குறித்த நபர் கைது செய்யப்பட்டான். 

இச்சம்பவம் சனிக்கிழமை Saint-Lazare தொடரூந்து நிலையத்துக்கு அருகே, நண்பகலுக்கு சற்று முன்னதாக இடம்பெற்றுள்ளது. தவிர, அவனிடம் இருந்து கறுப்பு முகமூடி, கண்ணாடி, கறுப்பு மேலங்கி போன்றவையும் மீட்கப்பட்டிருந்தது. தன்னை ஒரு ‘சுப்பர் ஹீரோ’ என அடையாளப்படுத்தியிருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். 

முந்தைய ஆர்ப்பாட்டங்களில் குறித்த நபர்  ஆயுதங்கள் எடுத்துவந்திருந்ததற்காக முன்னர் ஒருதடவையும் கைது செய்யப்பட்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!