International
பிரான்ஸ்

பரிஸ் – சுற்றிவளைக்கப்பட்ட வாடகை மகிழுந்து சாரதி! – கொள்ளை!!

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வாடகை மகிழுந்து சாரதி ஒருவர் சுற்றிவளைக்கப்பட்டார்.

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Buttes-Chaumont பூங்காவைச் சுற்றியுள்ள வீதியில் சென்றுகொண்டிருந்த குறித்த மகிழுந்தை நான்கு நபர்கள் வழி மறித்துள்ளனர். பின்னர் மகிழுந்து சாரதியை மிரட்டி அவரிடம் இருந்த கைத்தொலைபேசியை பறித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த €40 யூரோக்களையும் கொள்ளையிட்டுள்ளனர். ஆனால் சாரதியை அவர்கள் தாக்கவில்லை. அவர்களிடம் கைத்துப்பாக்கி, கண்ணீர் புகை குண்டு என ஆயுதங்கள் இருந்ததாக சாரதி தெரிவித்துள்ளார்.

19 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அப்பகுதி முழுவதும் கொள்ளையர்கள் தேடப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!