International
பிரான்ஸ்

பரிஸ் – சென் நதியில் இருந்து மீண்டும் சடலம் மீட்பு!!

கடந்த திங்கட்கிழமை சென் நதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டதன் பின்னர், இன்று வியாழக்கிழமை மீண்டும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில் இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகலை ஒட்டி, Quai Saint-Bernard பகுதியை ஊடறுக்கும் சென் நதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணைகளில் கடந்த நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு குறையாமல் குறித்த சடலம் தண்ணீருக்குள் இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் காணப்படவில்லை. உடற்கூறு பரிசோதனைகளின் பின்னரே விபரங்கள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தவிர, இவ்வருட ஆரம்பத்தில் இருந்து சென் நதியில் மீட்கப்படும் ஐந்தாவது சடலம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சடலங்களுக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தவிர, சென் நதியில் நீச்சலடிப்பதற்கு கட்டாயத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் காவல்துறையினர் நினைவூட்டியுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!