International
பிரான்ஸ்

பரிஸ் – தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்! – மின்சாரம் தாக்கி பலி!!

நபர் ஒருவர் நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்ல, தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு பரிஸ் மூன்றாம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. 00.27 மணிக்கு, Arts et Métiers மெற்றோ நிலையத்தில் நபர் ஒருவர் 11 ஆம் இலக்க நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அப்போது மிக மோசமான மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நபரை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

SAMU மருத்துவர்களால் இதய துடிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் குறித்தன்னபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, உடலின் சில பாகங்கள் எரிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் இலக்க வழியில் சத்தலே நோக்கி ஒரு மணிநேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!