International
பிரான்ஸ்

பரிஸ் – நான்கு மாதங்களாக கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த ஐந்து சிறுவர்கள் கைது!!

கடந்த நான்கு மாதங்களாக வீதிகளில் பயணிப்பவர்கள் உட்பட பலரிடம் கொள்ளை இட்டுவந்த ஐந்து சிறுவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த நான்கு மாதங்களாக பரிசின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். இடுப்புப்பட்டி மூலம் பலரை திடீரென தாக்கி நிலை குலைய வைத்து, அவர்களிடம் இருந்து தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடியுள்ளனர். இவர்களால் இதுவரை எட்டுப்பேர் வரை மோசமாக தாக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதனால் பாதிப்படைந்தவர்கள் பலர் வேலைக்கு செல்லமுடியாத நிலை கூட ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்கள் பதின்நான்காம் வட்டாரத்தில் உள்ள தொடரூந்து தண்டவாளத்தின் அண்மித்த பகுதிகளில் கொள்ளையை மேற்கொண்டுள்ளனர். கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர், பின்னர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இக்கொள்ளை கூட்டத்தில் உள்ள அனைவரும் இளம் பருவத்தினர் எனவும், அவர்களின் தலைவராக செயற்பட்ட நபரை காவல்துறையினர் பின் தொடர்ந்து, அதன் பின்னரே ஐவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மொத்தம் 17 கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!