International
பிரான்ஸ்

பரிஸ் நோத்ர-தாம் தேவாலயம் – 856 வருட வரலாறு

தற்போது தீவிபத்திற்கு உள்ளாகிப் பெரும் சேதமடைந்துள்ள பரிசின் Notre-Dame-de  தேவாலயமானது மாபெரும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.

Maurice de Sully பேராயரின் பெரும் அழுத்தத்தின் பேரில், போப்பாண்டவர் அலெக்சாண்டர் III முன்னிலையில் 1163 ஆம் ஆண்டு இந்தத் தேவாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

தொடர்ச்சியாக இரண்டு நூற்றாண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக இந்தத் தேவாலயம் பல சோதனைகளைச் சந்தித்தாலும், பரிஸ் மக்களின் சாட்சியமாக எட்டு நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது.

இதற்கு முன்னர், முக்கிய தேவாலயாக விளங்கிய Saint-Etienne  தேவாலயம், பெருந்திரளான மக்களை உள்ளடக்க முடியாமல் திணறிய நிலையில், பெருந்தொகையான மக்கள் வாழ்ந்து வந்த பரிஸ் நகரத்தில் நோத்ர-தாம் தேவாலயத்தைக் கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

1200 ஆம் ஆண்டில் இருந்து,  ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கிய பரிஸ் நகரத்தில், 200.000 மக்கள் வாழ்ந்து வந்தனர். இது மிகவும் பெரிய சனத்தொகை என்பதால் இது இங்கு கட்டப்பட்டது.

1804 இலருந்து, அதாவது, நெப்போலின் காலத்தில் இருந்து மிகவும் பிரபல்யம் அடைந்த இந்தத் தேவாலயம், இன்று மில்லியன் கணக்கிலான உல்லாசப் பயணிகளை ஈர்த்து வந்துள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!