International
பிரான்ஸ்

பரிஸ் – பாரிய சத்தத்துடன் இடிந்து நொருங்கிய கட்டிடம்!!

பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிட்டம் ஒன்றின் ஒரு பகுதி பாரிய சத்தத்துடன் வெடித்து நொருங்கியுள்ளது. ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Riquet வீதிக்கும்  Pajol வீதிக்கும் இடைப்பட்டு உள்ள கட்டிடம் ஒன்றில், 22:00 மணி அளவில் பாரிய வெடிப்பு சத்தம் ஒன்று கேட்டுள்ளது. பரிஸ் காவல்துறையினர் மற்றும் பரிஸ் தீயணைப்பு படையினர் (BSPP) சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்துள்ளனர். அங்கு, நான்கு மாடி கட்டிடத்தின் முதலாவது தளம் ஒன்றும், இரண்டாவது தளத்தின் ஒரு பகுதியும் வெடித்து நொருங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த இடிபாடுக்குள் சிக்கி ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். <<இடி முழக்கம் போன்ற ஒரு சத்தம் கேட்டது>> என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதுவரை இது தொடர்பான சரியான காரணம் அறிவிக்கப்படவில்லை. எரிவாயு கசிவினால் ஏற்பட்ட விபத்து இல்லை என முதல்கட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!