International
பிரான்ஸ்

பரிஸ் – மண்டையோட்டு குகைக்குள் தவறி விழுந்த பெண்! – மூன்று மணிநேர போராட்டம்!!

பரிசில் பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட பகுதி ஒன்றினால் மண்டையோட்டு சுரங்கத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.

பரிசுக்குள் உள்ள நிலகீழ் catacomb மண்டையோட்டு சுரங்கத்தின் குகைக்குள்ளேயே குறித்த பெண் தவறி விழுந்துள்ளார். சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, 19:00 மணி அளவில், பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள rue Hallé வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் தனது நண்பர்களுடன் குகைக்குள் இறங்க முற்பட்டுள்ளார். புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வமாக இருந்ததாக அறியமுடிகிறது. ஆனால் அந்த வழி தடைசெய்யப்பட வழி எனவும் அத்துமீறி நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் குகைக்குள் தவறி விழுந்து சிக்கிக்கொண்டுள்ளார் என தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெண்ணை தீயணைப்பு படையினர் மூன்று மணிநேரம் போராடி மீட்டுள்ளனர். அவரின் தொடை எலும்பு முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, நேற்று செவ்வாய்க்கிழமை அவருக்கு சத்திர சிகிச்சையும்   மேற்கொள்ளப்பட்டது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!