International
பிரான்ஸ்

பரிஸ் – மதவாத தாக்குதலுக்கு எதிராக – நகரமண்டபம் அறிமுகம் செய்யும் செயலி!!

பரிசில் இடம்பெறும் மதவாத தாக்குதல்களுக்கு எதிராக உடனடியாக புகார் அளிக்கும் வகையில், புதிய தொலைபேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளனர்.

இதற்கான நடவடிக்கைகளை பரிஸ் நகர மண்டபம் முன்னெடுத்து வருகின்றது. <<Dans ma rue>> இந்த செயலியூடாக பரிசில் இடம்பெறும் மதவாத, இனவாத தாக்குதல்களோடு, ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது நடாத்தப்படும் வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றையும் புகார் அளிக்கலாம். புகைப்படங்களோடு நீங்கள் உங்களது புகார்களை அளிக்கலாம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசில், துப்பரவு பணியாளர்களால் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 21 இடங்களில் யூத மதத்துக்கு எதிராக தாக்குதல்கள் (ஓவியங்கள், இலட்சனைகள், கேலி வாசகங்கள்) பதியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 17 ஆம் வட்டாரத்தில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் பூங்காவில் சமீபத்தில் சில ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, RER C இல் இதுபோல் ஓவியங்கள், சித்திரங்கள் வரைந்த நபர் ஒருவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!