International
பிரான்ஸ்

பரிஸ் – foire du Trône இற்கு முன்னால் பெரும் குழு மோதல்! – 13 பேர் கைது!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் உள்ள foire du Trône இற்கு முன்னால், 30 பேர்வரை குழு மோதலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். 

பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள foire du Trône இன் பிரதான வாசலுக்கு முன்பாக இரவு 9.50 மணி அளவில் இந்த மோதல் வெடித்துள்ளது. 30 பேர் வரை பெரும் மோதலில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கினார்கள். உடனடியாக ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோந்தாமினர்கள் தலையிட்டனர். ஆனால் மோதலில் ஈடுபட்டவர்கள் எதிர்பாரா விதமாக ஜோந்தாமினரை தாக்க முற்பட்டார்கள். இதில் ஒரு ஜோந்தாமி அதிகாரி காயமடைந்தார். அதைத் தொடர்ந்து ஜோந்தாமினர் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 13 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் 13-17 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு அடிப்படையாக அமைந்தது மது போதை என ஜோந்தாமினர்கள் தெரிவித்தனர். பின்னர், இன்று திங்கட்கிழமை காலை குறித்த ஐந்து 17 வயதுக்கு உட்பட்டவர்களும் விடுவிக்கப்பட்டனர். மீதமானவர்கள் தொடர்ந்தும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!