International
பிரான்ஸ்

பாடசாலை பேருந்து விபத்து ! – மாணவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் காயம்!!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை Objat, (Corrèze) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Burg d’Allassac க்கு முன்பாக உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது. Brive-la-Gaillarde பாடசாலையைச் சேர்ந்த 15 மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று மற்றுமொரு சிறிய பேருந்துடன் மோதியது. எதிர்திசையில் சிறிய பேருந்து வந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில், பாடசாலை பேருந்தின் சாரதில் பலியாகியுள்ளார். தவிர, ஒன்பது மாணவர்கள் காயமடைந்துள்ளனர். எதிர் பேருந்தின் சாரதியும் படுகாயமடைந்துள்ளார். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டனர். விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!