பிரான்சில் ரேடார்கள் பொருத்தப்பட்ட இடங்கள் Tous les emplacements des radars fixes en France
பிரான்ஸ் நாடு முழுவதும் நிலையாக பொருத்தப்பட்ட ரேடார்கள் மொத்தமாக 3275 உள்ளன. இவற்றில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை படம் எடுப்பவை, போக்குவரத்து சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்லும் வாகனங்களை படம் எடுப்பவை என அனைத்து விதமான ரேடார்களும் அடங்கும். இந்த வகை நிலையாக பொருத்தப்பட்ட ரேடார்கள் உள்ள இடங்கள் கொண்ட புவியியல் வரைபடத்தை பிரான்ஸ் உள்துறை https://radars.securite-routiere.gouv.fr/ இணையத்தளத்தில் வெளியீட்டு உள்ளது.
இந்த வரைபடத்தின் மூலம் நீங்கள் பயணம் செல்லும் பாதையில் எந்த விதமான ரேடார் பொருத்தப்பட்டுள்ளன என்ற விபரங்களை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.