International
பிரான்ஸ்

பிரான்ஸ் – சீனா – விண்வெளி ஒப்பந்தம் கைச்சாத்து!!

பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்து விண்வெளி ஒப்பந்தம் ஒன்றை நேற்று கைச்சாத்து இட்டுள்ளது.

இருநாட்கள் சுற்றுப்பயணமாக பரிசுக்கு வருகை தந்துள்ள சீன ஜனாதிபதி Xi Jinping, நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை சந்தித்தார். இருவரும் சில வியாபார ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். இதில் விண்வெளி கூட்டு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. அதன்படி, 2023-2024 ஆகிய ஆண்டுகளின் நிலவுக்கு அனுப்பப்படும் சீனாவின் Chang’e-6 விண்கலத்தில், பிரெஞ்சு விஞ்ஞானிகளும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சீனாவும் பிரான்சும் விண்வெளி கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் இணைவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, நேற்றைய ஒப்பந்தத்தில் புவி வெப்பமடைதல் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!