International
பிரான்ஸ்

பிரான்ஸ் – பெல்ஜியம் உலகக்கோப்பை போட்டி! – இராட்சத திரையில் பரிசில் காணலாம்..!!

இறுதியாக பரிசில் பலத்த பாதுகாப்பின் கீழ், இராட்சத திரை அமைக்கப்பட்டு உலகக்கிண்ண போட்டியின் நாளைய ஆட்டம் ஒளிபரப்பப்பட உள்ளது.

பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் மோதிக்கொள்ளும் இந்த போட்டி, மிகுந்த பரபரப்புக்கிடையே இடம்பெற உள்ளது. வாழ்வா சாவா என்ற இப்போட்டியினை காண 20,000 மக்கள் கூடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு அணி விளையாடிய முதல் கால் இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் திரை அமைக்கப்படும் என ஆன் இதால்கோ அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது பரிஸ் நகர மண்டபத்துக்கு முன்னால் இராட்சத திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை, செவ்வாய்க்கிழமை ஜூலை 10 ஆம் திகதி, மாலை 4 மணிக்கு போட்டி ஒளிபரப்பப்படும். பொதுமக்களை பாதுகாப்பு கருதி குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1,200 காவல்துறையினர்  பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!