International
பிரான்ஸ்

புதன்கிழமை 18:50 மணிக்கு Notre-Dame தேவாலயத்தின் மணி ஒலிக்கும்!!

நாளை புதன்கிழமை 18:50 மணிக்கு Notre-Dame தேவாலயத்தின் மணி ஒலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீச்சம்பவம் இடம்பெற்று மிகச்சரியாக 48 மணிநேரத்தில் இந்த மணி ஒலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை 18:50 மணிக்கு தீ பரவ ஆரம்பித்திருந்தது வாசகர்கள் அறிந்ததே. 

சற்று முன்னர், மாலை 4 மணி அளவில் Notre-Dame தேவாலயத்துக்கு உள்துறை அமைச்சர் Christophe Castaner வருகை தந்தார். நேற்றைய தினம் சம்பவத்தின் போது Mayotte இல் இருந்த அமைச்சர், இன்றைய தினம் ஊடகங்களிடம் உரையாடினார். <<உணர்வுகளுக்கு அப்பால், வார்த்தைகளுக்கு அப்பால், Notre-Dame தேவாலயத்தை மீள கொண்டுவர போராடும் ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் நினைத்து பெருமை கொள்கிறேன்! தீயணைப்பு வீரர்கள் 500 பேருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!>> என குறிப்பிட்டார். 

24 மணிநேரங்களுக்குள்ளாக €700 மில்லியன் யூரோக்களை கடந்து நன்கொடை சேர்ந்துகொண்டிருக்கும் இந்நிலையில், இந்த பட்டியலில் அமெரிக்க நிறுவனமான Apple நிறுவனமும் கை கோர்க்கின்றது. இதன் நிறுவனர் Tim Cook இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

அதேவேளை, பிரான்சின் Bettencourt-Meyers குடும்பத்தினர் €100 மில்லியன் யூரோக்களும், பிரான்சின் அழகுசாதன பொருட்கள் நிறுவனமான L’Oréal  நிறுவன குழுமம் €200 மில்லியன் யூரோக்களும் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளனர். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!