International
பிரான்ஸ்

புது வருடத்தில் ஜனாதிபதியின் செல்வாக்கு அதிகரிப்பு!!

மஞ்சள் மேலங்கி போராளிகளின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தினால் வெகுவாக குறைந்துகொண்டே சென்ற ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு, 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அதிகரித்துள்ளது.

Ifop-Fiducial நிறுவனம் எடுத்திருந்த இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியாகியிருந்தது. இதில் 2019 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடந்த மாதத்தை விட 5 புள்ளிகளால் செல்வாக்கு அதிகம் பெற்றுள்ளார். அதேவேளை, பிரதமர் எத்துவா பிலிப் 7 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தற்போது 28 வீத செல்வாக்குடனும், பிரதமர் எத்துவா பிலிப் தற்போது 33 வீத செல்வாக்குடனும் உள்ளனர். செல்வாக்கு வீத அடிப்படையில் அதிகரித்திருந்தாலும், இந்த செல்வாக்கு வீதம் மிக குறைவானதாகவே உள்ளது.

*கருத்துக்கணிப்பு ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில், 18 வயதுக்கு மேற்பட்ட 1,014 பேரிடம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!