International
பிரான்ஸ்

பூனையை மீட்க குவிந்த 19 தீயணைப்பு படையினர்! – 11 மணிநேர போராட்டம்!!

பூனை ஒன்றை மீட்க 19 தீயணைப்பு படையினர் பதினோரு மணிநேரமாக போராடிய சுவாரஷ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

கடந்த சனிக்கிழமை நீஸ் நகருக்கு அருகே (Alpes-Maritimes) உள்ள Trinity எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள வீடு ஒன்றின் சுவற்றில் உள்ள துளை ஒன்றுக்குள் சிறிய பூனை ஒன்று தானாகவே சிக்கொண்டுள்ளது. குடும்பத்தினர் பூனையை மீட்க போராடி, அது தோல்வியில் முடிய, தீயணைப்பு படையினரை அழைத்துள்ளனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், பூனையை மீட்க பெரிதும் போராடினர். மின்சாரக் கம்பிகள் ஊடுருவியிருக்கும் குறித்த துளையில் பூனை சிக்கிக்கொண்டிருந்ததால், பூனையை உயிருடன் மீட்க மேலதிகமாக தீயணைப்பு படையினர் தேவைப்பட்டுள்ளனர். மொத்தமாக 19 தீயணைப்பு படையினர் 11 மணிநேரம் போராடி பூனையை மீட்டுள்ளனர். முதலில் பூனை இருந்த துளையைச் சுற்றி சிறிய துளைகள் இட்டு பின்னர் பூனையை மீட்டுள்ளனர். 

பூனை வெகுவாக பயந்திருந்த போதும், உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!