International
பிரான்ஸ்

பொபினி : பாரிய தீ விபத்து!!

நேற்று புதன்கிழமை இரவு, பொபினியில் உள்ள மகிழுந்து விற்பன்னர் நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 

பொபினியின் rue de l’Industrie வீதியில் உள்ள இந்த கடையே தீப்பிடித்துள்ளது. பழைய பொருட்கள், மற்றும் மகிழுந்துகள் மீள் விற்பனை ஆகிய தொழில்கள் இடம்பெற்றிருந்த இந்த கடையில் நேற்று புதன்கிழமை 20:00 மணி அளவில், திடீரென தீப்பிடித்துள்ளது. அருகருகே மகிழுந்துகள் நின்றதாலும், இலகுவில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எண்ணைகள் அங்கு இருந்ததாலும் தீ கட்டுக்கடங்காமல் வேகமாக பரவியுள்ளது. 

பாரிய அளவு கரும்புகை வானில் கலந்தது. பரிஸ் சுற்றுவட்ட வீதியில் இருந்து பலரால் இந்த கரும்புகையை பார்க்கக்கூடியதாக இருந்ததாகவும், சக்கரங்கள் எரியும் வாசனை பலமாக பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்றபோதும், அருகே SNCF தண்டவாளத்தில் சேவைகள் நிறுத்தப்பட்டன. 22:00 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயணைப்பு படையினர் இலேசான காயங்களுக்கு உள்ளாகினர். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!