International
பிரான்ஸ்

போராட்டத்தில் 41,500 பேர்! – உள்துறை அமைச்சகம் தகவல்!!

நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், 41,500 பேர் கலந்துகொண்டிருந்ததாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

14 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் நேற்றைய தினம் ஓரளவு அமைதியாகவே இடம்பெற்றது. கடந்த வார போராட்டத்தை விட, குறைந்த அளவு மக்களே இந்த வாரம் களத்தில் இறங்கினார்கள். கடந்த வாரம் பரிசில் 4,000 பேரும், 51,400 பேர், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தவாரம் 41,500 பேர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை, பரிசுக்குள் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், மஞ்சள் மேலங்கி போராளிகள், தாங்கள் 101,379 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக 18:00 மணிக்கு தெரிவித்திருந்தனர். அதேவேளை அவர்கள் கடந்த வாரத்தில் தாம் 111,010 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!